Friday, May 3, 2013

ஒக்கலிகர் தின விழா




நன்றி:தினமனி;
காரமடையில் 30-ஆம் தேதி  ஒக்கலிகர் தின விழா
By  மேட்டுப்பாளையம்
First Published : 28 December 2012 08:11 AM IST
காரமடையில் வரும் 30-ஆம் தேதி ஒக்கலிகர் தின விழா நடைபெறுகிறது.
 
இது குறித்து தமிழக ஒக்கலிகர் மகாஜன சங்க மாநில இளைஞரணி தலைவர் ஜோதிமணி கூறியது:
 
கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, தேனி, கம்பம் உள்ளிட்ட 9 மாவட்டப் பகுதிகளில் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டு பெரும்பான்மையாக வசித்து வரும் ஒக்கலிக இன மக்களை ஒன்றுசேர்க்கும் விதமாகவும், அவர்களின் மேம்பாடு குறித்து ஆலோசிக்கும் வகையிலும் இவ் விழா கொண்டாடப்பட உள்ளது.
 
காரமடை நகரம் மற்றும் வட்டார ஒக்கலிக மகாஜன சங்கம் சார்பில் ரவி ராம் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு, மாவட்ட சங்கத் தலைவர் சாம்ராஜ் தலைமை வகிக்கிறார். காரமடை சங்க பொருளாளர் எம்.கே.கே மோகன், மாவட்ட செயலர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
 
இதில் மாநில ஒக்கலிக மகாஜன சங்கத் தலைவர் ஆர்.வெள்ளிங்கிரி, தொகுதி எம்எல்ஏ .கே. சின்னராஜ், மாவட்ட சங்க கெüரவத் தலைவர் டாக்டர் ராமசாமி, சங்க சட்ட ஆலோசகர் மா. சின்னராசு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஞானசேகரன், காரமடை ஒன்றியக் குழு தலைவர் ராஜ்குமார், பேரூராட்சித் தலைவர் ஆறுமுகசாமி, தொழிலதிபர்கள் கிருஷ்ணசாமி, சண்முகசுந்தரம், எம்கேகே விஜயன், பாலாஜி ராஜேந்திரன், பிஎன் ராஜேந்திரன், எம்என்ஜி கோபால், கல்யாணசுந்தரம் உள்பட சங்கத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
 
இவ்விழாவில், ஒக்கலிக மகாஜன சங்க கெüரவத் தலைவரும், ஸ்ரீ விஜயலட்சுமி பொது நல அறக்கட்டளையின் நிறுவுனருமான .ஆறுமுகசாமி கெüரவிக்கப்பட உள்ளார். மேலும் அவரது பிறந்த நாள் நினைவாக, ஏழை எளிய மாணவ,மாணவியருக்கு இலவச கல்வி உதவித்தொகை மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்றார் அவர்.

Friday, July 20, 2012

இன்று சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஜூன் 29,2012 
A+  A-
திண்டுக்கல்:ஒக்கலிகர் (காப்பு)படவனவார் குலம்,வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.ஒக்கலிகர் சங்க மாநில கவுரவ தலைவர் ஆறுமுகசாமி தலைமை வகிக்கிறார். நான்காம் கால பூஜையுடன் விழா துவங்குகிறது. 8.45க்கு தீர்த்தம் அழைத்து வரப்படுகிறது. 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் அன்னதானம் நடக்கிறது. திண்டுக்கல் டவுன், செம்பட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் விசுவநாதன், ஆனந்தன், முன்னாள் அமைச்சர் பெரியசாமி,எம்.பி., க்கள் ஞானதேசிகன்,சித்தன்,தம்பிதுரை, எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர்குழு தலைவரும்,முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன், அறங்காவலர்கள் இளங்கோவன்,சவடமுத்து,சவடப்பன், சங்க தலைவர் காளியாயி(எ) ராமசாமி,ஆசிரியர் சுந்தரபாண்டியன் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.
நன்றி; தினமலர்

ஒக்கலிகர் சங்க கூட்டம்

டிசம்பர் 27,2011,22:32 IST








தேனி : தேனி ஒக்கலிகர் நலச்சங்கத்தின் மகாசபை கூட்டம், தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. முன்னாள் செயலாளர் சுப்புராம் வரவேற்றார். செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை வாசித்தார். கோவை விஜயலெட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகச்சாமி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி, சங்க கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். குஞ்சடிக மடத்தின் பீடாதிபதி சாந்தவீரசுவாமிகள்,தமிழ்நாடு ஒக்கலிகர் சங்க தலைவர் வெள்ளியங்கிரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூடலூர் நகராட்சி தலைவர் அருண்குமார், க.புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் ஜானகி, ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி, கே.கே.பட்டி பேரூராட்சி தலைவர் சாந்தி, அன்னஞ்சி ஊராட்சி தலைவர் பிரகாஷ் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் நடராஜன், துணை தலைவர்கள் கர்ணன், சிவாஜி மோகன், கூடலூர் ஆனந்தனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். துணை தலைவர்கள் ரவிச்சந்திரன், முருகன், துணை செயலாளர்கள் ராஜாராம், ராஜ்குமார், ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராஜூ நன்றி கூறினார்.
நன்றி தினமலர்

Thursday, June 28, 2012

இன பட்டக்கார குல கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

                           ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் வட்டம்- புஞ்சை புளியம்பட்டிக்கு அருகில்     மாதம்பாளையம் கிராமம்  கீழ்முடுதுறையில் அமைந்துள்ள
                        ஒக்கலிகர் இன பட்டக்கார குல மக்கள் குலதெய்வம்
                                        அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத
                          அருள்மிகு திம்மராயப் பெருமாள் திருக்கோவில் 
                             ஜீரணோதாரண மஹா ஸம்ப்ரோக்க்ஷண

                  மஹா கும்பாபிஷேக விழா                              அழைப்பிதழ் 

                            நாள் : 29-06-2012 ஆனி 15 வெள்ளிக்கிழமை
    

அன்புடையீர்,
                                நிகழும் மங்களகரமான நந்தன வருடம் ஆனி மாதம் 15 ம் தேதி (29.6.2012) வெள்ளிக்கிழமை வளர்பிறை தசமி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்குமேள் 10.00 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத அருள்மிகு திம்மராயப் பெருமாளுக்கு மஹா கும்பாபிஷேகம் காரமடை ஸ்ரீ வேதவ்யாச சுதர்சன பட்டர் சுவாமிகள் தலைமையில் கொடைவள்ளல் கல்வித் தந்தை திரு.ஓ ஆறுமுகசாமி அவர்கள் முன்னிலையில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் வந்திருந்து பெருமாள் திருவருள் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
                                                     நிகழ்ச்சி நிரல்
28-06-2012 வியாழக்கிழமை
மாலை 4-00 மணிக்கு மேல்
இரவு     8-00மணிவரை               

அநுக்ஞை -அன்க்குரார்பணம்-ம்ருத் சங்கரணம் பாலிகா ஸ்தாபனம் - கும்ப ஆவாகணம் ஹோமம் திவ்வியபிரபந்தம் வேதபாராயணம் -திருவாராதனம் சாற்றுமுறை தீர்த்த பிரசாதம்
                                                                                               
                                                                                                                                                                                          


இரவு 10-00 மணிக்கு      விமான கலச ஸ்தாபனம்

29-06-2012 வெள்ளிக்கிழமை
காலை 6-00 மணிமுதல் ஹோமம் -வேதபாராயணம்,திவ்யபிரபந்தம்-  பூர்ணஹுதி
காலை 9-00 மணிமுதல் 10 -00 மணிவரை மஹா சம்ப்ரோக்சண மஹாகும்பாபிஷேகம் திருவாராதனம் வேதபிரபந்த் சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம்,பாகவத பஜனை கோஷ்டி பாகவத திதியாராதனை

 29-06-2012 வெள்ளிக்கிழமை காலை 8-00 மணிமுதல் ஆதிமாதையனூர் பஜனைகுழுவின் பஜனை நடைபெறும்
காலை 10-00 மணிமுதல் அன்னதானம் நடைபெறும்


                                   மண்டபம் திறப்புவிழா
                29-06-2012 வெள்ளிக்கிழமை காலை 8-30 மணிக்கு
                                                தலைமை
                                பட்டக்கார குலச் செம்மல்
                           கொடைவள்ளல் கல்வித் தந்தை

                 திரு.ஓ ஆறுமுகசாமி அய்யா அவர்கள்

                                                         தொழிலதிபர்.
நிர்வாக இயக்குனர்,செந்தில்குழுமம் நிறுவனர், ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை-கோவை

                                     முன்னிலை
                       திரு.V.Rதிம்மராயப்பன் B.E அவர்கள்
                                  தலைமைபொறியாளர்[பணி ஓய்வு]
                                    தமிழ்நாடு மின்வாரியம்,புதுவடவள்ளி
           
                                                                                                          இங்ஙனம்
                                                                                    அறங்காவலர்கள் குழு
                                                                                     விழாக்குழு ,
                                                                                      ஒக்கலிகர் மற்றும் ஒக்கலிகர் இன
                                                                                     பட்டக்காரகுலமக்கள்



30-06-2012 சனிக்கிழமை முதல் 24 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறும்




      

Wednesday, March 30, 2011

முன்னுரிமை கோரி தீர்மானம்

நன்றி தினமலர்:
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011,03:00 IST
ஒக்கலிகருக்கு முன்னுரிமை கோரி தீர்மானம்
மேட்டுப்பாளையம் : தமிழகத்தில் 17 சட்டசபை தொகுதிகளில் ஒக்கலிக சமுதாய மக்கள் கணிசமாக உள்ளதால், சட்டசபை தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி தலைவர்கள் இந்த இன வேட்பாளருக்கு முன்னுரிமை தர கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் ஒக்கலிகர் சமுதாய இளைஞர் அணியின் ரத்ததான இயக்க விழிப்புணர்வு விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒக்கலிக சமுதாய இளைஞர்கள் ரத்ததான இயக்கம் துவங்கி அனைத்து சமுதாய மக்களுக்கும் இலவசமாக ரத்தம் கொடுக்கும் சேவைக்கு பாராட்டுக்கள். மேட்டுப்பாளையம் உட்பட 17 சட்டசபை தொகுதிகளில் ஒக்கலிக சமுதாய மக்கள் கணிசமாக உள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தலில் இச்சமுதாய வேட்பாளர்களுக்கு முன்னிரிமை அளிக்க வேண்டும்.ஒக்கலிக சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவில் சேர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு "பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ்' திட்டம் கொண்டு வர வேண்டும். விளை பொருளுக்கு விலை நிர்ணயம் வேண்டும். விவசாய இடு பொருளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். மணிக்கு ஒரு மின்சார ரயில் சேவையை, கோவை - மேட்டுப்பாளையம், கோவை - திருப்பூருக்கு அளிக்க வேண்டும்உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேட்டுப்பாளையம் வட்டார ஒக்கலிகர் சங்க தலைவர் ராமசாமி வரவேற்றார். நகர மன்ற தலைவர் சத்தியவதி முன்னிலை வகித்தார். விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, ஒக்கலிகர் சங்க தலைவர் வெள்ளிங்கிரி, பொதுப்பணி சங்க தலைவர் நஞ்சையன், ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், கவுரவ தலைவர் மோகன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜோதிமணி உட்பட பலர் பேசினர். கவுன்சிலர் பழனிசாமி நன்றி கூறினார். இளைஞர் அணி சார்பில் நடந்த ரத்ததான முகாமுக்கு, "இந்தோ - ஸ்விஸ் சிந்தடிக் ஜெம்' ஆலை நிர்வாக இயக்குனர் கிருஷ்ணசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். வி.என்.கே., கல்லூரி முதல்வர் ரேவதி முன்னிலை வகித்தார்.டாக்டர்கள் நஞ்சுண்டப்பன், சுதாராணி குழுவினர் பரிசோதனை செய்து நன்கொடையாளர்களிடம் ரத்தம் பெற்றனர்.