Showing posts with label ஒக்கலிகர்பவன். Show all posts
Showing posts with label ஒக்கலிகர்பவன். Show all posts

Friday, May 3, 2013

ஒக்கலிகர் தின விழா




நன்றி:தினமனி;
காரமடையில் 30-ஆம் தேதி  ஒக்கலிகர் தின விழா
By  மேட்டுப்பாளையம்
First Published : 28 December 2012 08:11 AM IST
காரமடையில் வரும் 30-ஆம் தேதி ஒக்கலிகர் தின விழா நடைபெறுகிறது.
 
இது குறித்து தமிழக ஒக்கலிகர் மகாஜன சங்க மாநில இளைஞரணி தலைவர் ஜோதிமணி கூறியது:
 
கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, தேனி, கம்பம் உள்ளிட்ட 9 மாவட்டப் பகுதிகளில் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டு பெரும்பான்மையாக வசித்து வரும் ஒக்கலிக இன மக்களை ஒன்றுசேர்க்கும் விதமாகவும், அவர்களின் மேம்பாடு குறித்து ஆலோசிக்கும் வகையிலும் இவ் விழா கொண்டாடப்பட உள்ளது.
 
காரமடை நகரம் மற்றும் வட்டார ஒக்கலிக மகாஜன சங்கம் சார்பில் ரவி ராம் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு, மாவட்ட சங்கத் தலைவர் சாம்ராஜ் தலைமை வகிக்கிறார். காரமடை சங்க பொருளாளர் எம்.கே.கே மோகன், மாவட்ட செயலர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
 
இதில் மாநில ஒக்கலிக மகாஜன சங்கத் தலைவர் ஆர்.வெள்ளிங்கிரி, தொகுதி எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ், மாவட்ட சங்க கெüரவத் தலைவர் டாக்டர் ராமசாமி, சங்க சட்ட ஆலோசகர் மா. சின்னராசு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஞானசேகரன், காரமடை ஒன்றியக் குழு தலைவர் ராஜ்குமார், பேரூராட்சித் தலைவர் ஆறுமுகசாமி, தொழிலதிபர்கள் கிருஷ்ணசாமி, சண்முகசுந்தரம், எம்கேகே விஜயன், பாலாஜி ராஜேந்திரன், பிஎன் ராஜேந்திரன், எம்என்ஜி கோபால், கல்யாணசுந்தரம் உள்பட சங்கத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
 
இவ்விழாவில், ஒக்கலிக மகாஜன சங்க கெüரவத் தலைவரும், ஸ்ரீ விஜயலட்சுமி பொது நல அறக்கட்டளையின் நிறுவுனருமான ஓ.ஆறுமுகசாமி கெüரவிக்கப்பட உள்ளார். மேலும் அவரது பிறந்த நாள் நினைவாக, ஏழை எளிய மாணவ,மாணவியருக்கு இலவச கல்வி உதவித்தொகை மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்றார் அவர்.

Wednesday, March 30, 2011

முன்னுரிமை கோரி தீர்மானம்

நன்றி தினமலர்:
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011,03:00 IST
ஒக்கலிகருக்கு முன்னுரிமை கோரி தீர்மானம்
மேட்டுப்பாளையம் : தமிழகத்தில் 17 சட்டசபை தொகுதிகளில் ஒக்கலிக சமுதாய மக்கள் கணிசமாக உள்ளதால், சட்டசபை தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி தலைவர்கள் இந்த இன வேட்பாளருக்கு முன்னுரிமை தர கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் ஒக்கலிகர் சமுதாய இளைஞர் அணியின் ரத்ததான இயக்க விழிப்புணர்வு விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒக்கலிக சமுதாய இளைஞர்கள் ரத்ததான இயக்கம் துவங்கி அனைத்து சமுதாய மக்களுக்கும் இலவசமாக ரத்தம் கொடுக்கும் சேவைக்கு பாராட்டுக்கள். மேட்டுப்பாளையம் உட்பட 17 சட்டசபை தொகுதிகளில் ஒக்கலிக சமுதாய மக்கள் கணிசமாக உள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தலில் இச்சமுதாய வேட்பாளர்களுக்கு முன்னிரிமை அளிக்க வேண்டும்.ஒக்கலிக சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவில் சேர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு "பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ்' திட்டம் கொண்டு வர வேண்டும். விளை பொருளுக்கு விலை நிர்ணயம் வேண்டும். விவசாய இடு பொருளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். மணிக்கு ஒரு மின்சார ரயில் சேவையை, கோவை - மேட்டுப்பாளையம், கோவை - திருப்பூருக்கு அளிக்க வேண்டும்உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேட்டுப்பாளையம் வட்டார ஒக்கலிகர் சங்க தலைவர் ராமசாமி வரவேற்றார். நகர மன்ற தலைவர் சத்தியவதி முன்னிலை வகித்தார். விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, ஒக்கலிகர் சங்க தலைவர் வெள்ளிங்கிரி, பொதுப்பணி சங்க தலைவர் நஞ்சையன், ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், கவுரவ தலைவர் மோகன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜோதிமணி உட்பட பலர் பேசினர். கவுன்சிலர் பழனிசாமி நன்றி கூறினார். இளைஞர் அணி சார்பில் நடந்த ரத்ததான முகாமுக்கு, "இந்தோ - ஸ்விஸ் சிந்தடிக் ஜெம்' ஆலை நிர்வாக இயக்குனர் கிருஷ்ணசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். வி.என்.கே., கல்லூரி முதல்வர் ரேவதி முன்னிலை வகித்தார்.டாக்டர்கள் நஞ்சுண்டப்பன், சுதாராணி குழுவினர் பரிசோதனை செய்து நன்கொடையாளர்களிடம் ரத்தம் பெற்றனர்.

Thursday, February 25, 2010

கொடி மற்றும் பெயர் பலகை திறப்பு விழா



கோவை மாவட்டத்தில் கிராமங்கள்தோரும் ஒக்கலிகா மகாஜன சங்கத்தின் புதிய பெயர் பலகை திறந்துவைக்கப்பட்டு, கொடி ஏற்றும் விழா வெகும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.இதில் ஸ்ரீவியஜலட்சும் அறக்கட்டளை நிறுவனர் கொங்கு கொடை வள்ளல் திரு.ஓ.ஆறுமுகசாமி அவர்கள்,கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் திரு வெள்ளிங்கிரி [DSP ஒய்வு] மற்றும் சங்கத்தின் முன்னோடி தலைவர்கள், தொண்டர்கள், கிராம மக்கள் என் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டனர்.தங்கள் கிராமத்தில் கிளைச் சங்கங்கள் வேண்டுவோர் தலைமையிடமான ஒக்கலிகர் பவனை தொட்ர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.புதிய பெயர்ப் பலகை பச்சை நிறத்திற்கு பதிலாக கீரிம் வண்ணபின்புலதில் பிரவுன் வண்ண எழுத்துருக்களால் எழுதப்பட்டு மிகவும் அழகாக உள்ளது.பார்க்கவும்


விரைவில் ஈரோடு மாவட்டத்தில் இவ்விழா துவங்கும் என தெரிகிறது






Wednesday, February 24, 2010

எதற்காக - சமுதாய சங்கம்?

                 
                    சிந்திப்போம்!  செயல்படுவோம்!!
                               கட்டுரை:திரு வெள்ளிங்கிரி [DSP ஓய்வு] தலைவர்,
                          கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கம் 
                      இறைவன் படைப்பில் உருவான உயிரின்
பரிணாம வளர்ச்சி, ஓருயிர் இன தாவரங்கள் முதல், படிப்படியாக வளர்ச்சியுற்று கண்,காது,மூக்கு, வாய், தோல் என முறையே ஒளி,ஒலி,வாசனை,ருசி,தொடு உணர்வுகள் கொண்ட அயிந்தறிவு பிராணிகளாகின.அதிலிருந்து “நல்லது-கெட்டது” என பிரித்து அறியக்கூடிய “பகுத்தறிவு” எனும் ஆறாவது அறிவு கொண்ட மனித இனம் உருவானது.இது விஞ்ஞானமும்-மெய்ஞானமும் ஒப்புக்கொண்ட சரித்திர உண்மை.
                      சுமார் ஒருகோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தோன்றியது என எடுத்துக்கொள்வோம்.
இன்றைய மனிதனின் அறிவு, வளர்ச்சி அவன் தோன்றிய காலத்தில் இல்லை.இருந்திருக்கவும் முடியாது. காடுகளில் மரவுரி தரித்து, பிராணிகளின் சதைகளையே உணவாக உண்டு,குகைகளையும் பாறை இடுக்குகளையும் உறைவிடமாகக் கொண்டு,அ,இ,உ ஊ,என ஒலிகளை மட்டுமே எழுப்பி,சைகை பாசையில் பேசி வாழ்ந்துவந்தான்,சிறிது சிறிதாக ஒருவருடன் ஒருவர் அவரவர் அறிந்த பயிர் தொழில் முதல் பல தொழில்கள்
செய்து வாழ்ந்தான். பிறக்கிறான் சிறிது காலம் வாழ்கிறான். பின் மறைகிறான்.வாழ்ந்தகாலத்தில் இனவிருத்தி செய்கிறான்.இவ்வாறு மனிதகுல சரித்திரம் ஓர் தொடர்கதை.
                   இந்த உருண்டை உலகத்தில் உள்ள பல்வேறு நிலப்பகுதியில் மாறுபட்ட சீதோசண நிலைகள்,பல்வேறு பருவ நிலைகள் உண்டு.இதுபோன்ற மாறுபடும் கால சூழ்நிலைகளுக்கேட்ப ஆங்காங்கே அதற்குத் தகுந்தாற்போல் மனித இனம் வளர்ந்தது.எழுத்து-மொழி தோன்றி இன்றுவரை.அடடா எத்தனை முன்னெற்றம்.இவைகள் அத்தனையும் யாராவது
வரையறை செய்து முறை வகுத்து வந்ததல்ல.உலகத்தின் ஒரு பகுதி மக்கள் மற்ற பகுதி மக்களுடன் தொடர்பு கொள்ள வழிவகை இல்லாத கால சூழ்நிலையில் பல நாடுகள்,வெவ்வெறு மதங்கள்,ஜாதிகள் அத்தனையும் அந்தந்த கால சூழ்நிலைகளுக்கேற்ப மனிதனால் எற்படுத்தப்பட்டது.ஆனால் இன்று அறிவியலும்,சிந்தனை சக்தியிலும் அபரிமிதமான முன்னேற்றம் கண்டுள்ள மனிதன் “ஒன்றே குலம்-ஒருவனே தேவன்” என உணரத்தொடங்கிவிட்டான், இருப்பினும் தன்னோடு வாழையடி வாழையாக இனைந்து வந்த மதம்-தொழுதுவந்த கடவுள்(உருவம்) அவன் மனதிலிருந்து அவ்வளவு எளிதாக நீக்கிவிடமுடியுமா? நீக்கிவிடத்தான் சில நீச்சர்கள் விட்டுவிடுவார்களா?
                   இதே போல் தான் ஜாதிகள் ஏதோ சில காரணங்களுக்காக,செளகரிங்களுக்காக பழிகிக் கொண்ட தொழில்,பேசி கொண்ட மொழி போன்றவைகளல் கூடிக்கூடி வாழ்ந்துவிட்ட மக்கள் அவரவர்களுக்கு என்று ஜாதிகள்,குலங்கள் என பெயரிட்டு வாழ்ந்துவிட்டார்கள்.வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.படிப்படியாக ஏறபடுத்திக் கொண்ட மதங்களை,ஜாதிகளை இன்று திடீரென விட்டுவிட சாதாரண மனிதனால் இயலுமா? பழக்கவழக்க,பாச பந்தங்கள் தொடர்வது இயற்கையல்லவா? நிச்சயமாக ஜாதி மதங்கள் என்ற பேதங்கள் தேவை இல்லை.அவைகள் மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை.அறிவு வளர,வளர மனிதனாலேயே அவைகள் அழிக்கப்பட்டுவிடும்.எப்போது? இதுதான் கேள்வி.எவ்வாறு பல்வேறு மதங்கள்,பல்வேறு ஜாதிகள், பல்வேறு கடவுள்கள் என்று தோற்றுவிக்கப்பட்டு இலட்சக்கணக்கான ஆண்டுகள்
பழக்கப்பட்டுவிட்டதோ,அதே போல அவைகள் மறையவும் குறைந்தது பல நூறு ஆண்டுகளாவது ஆகும்.இன்று தலைதூக்கியுள்ள மதப்பிரச்சனைகள் எல்லாம் சிலரால் ஊக்குவிடப்பட்டுள்ள பிரச்சனை.தன் மதம்பெரிது.உன் மதம் தாழ்ந்தது.நீழ் கீழ் ஜாதி-நான் மேல் ஜாதி! நான் வழிபடும் கடவுள்தான் உண்மையான கடவுள்,மற்றவர்கள் தொழுவது கடவுளே அல்ல என கூறித்திரியும் வெறியர்களையும் சாமாளித்தல்லவா வெற்றி பெற்றாக வேண்டும்.
                    காற்று(சுவாசம்),நீர்,நெருப்பு,(உஷ்ணம்),நிலம்,(உணவு),ஆகாயம்,இவைகள் யார் கொடுத்தது.இவைகளில் ஒரு துளியை எந்த ஒரு மனிதனாலும் விஞ்ஞானியாலும் செய்யமுடியுமா? முஸ்லீம் சுவாசிக்கும் காற்று வேறு-கிருஸ்த்து சுவாசிக்கும் காற்று வேறு?மற்றவர்கள் சுவாசிக்கும் காற்றுவேறுவேறா? குடிக்கும் நீர் வேறு வேறா? அறியவில்லையே மதவெறி கொண்டவர்கள்.காலம் மாறும்.ஜாதி பேதங்கள் இல்லாத நாடு உருவாகும்!பெரும்பாலோர் இன்று அந்த திசை நோக்கித்தான் பணியாற்றுகிறார்கள். “உலக சமுதாய சேவை” என பணி தொடர்கிறது.இந்த பிரபஞ்சம் முழுவதும் அணுமுதல் அண்டம் வரை ஜட்ப்பொருள்-உயிர் இனம் அத்தனையிலும்  வான்காந்தமாய்-ஜீவநாதமாய்-அறிவாய்-உயிராய் –அன்பாய்-கருனையாய்-சுத்ட வெளியாய் எங்கும் எதிலும் உள்ளதே அந்த இறை சக்தி.இதில் ஏது ஏற்றத் தாழ்வு?
                    மனித இன பெருக்கத்திற்கு -தொடர்ச்சிக்கு
(இனவிருத்திக்கு) தாரம் வேண்டும்.அந்த தாரத்தை தன் அருகிலேயே ஒரே பாரம்பரியத்தில்,தான். தினம்தினம் சகோதிரியாய் பார்த்துப் பழகிய,ஏறக்குறைய இருவரின்
உயிரினங்களும் ஒரே மரபணுவாக உள்ளவளை தாரமாக கொள்வது சிறப்பான இனவிருத்தியைக் கொடுக்காது.இது விஞ்ஞானபூர்வமான உண்மை.அதனால் தான் பாரம்பரியம் தூரம் ஆக ஆக ,அவர்கள் ஓர்குலம்.இவர்கள் ஓர்குலம்-அவர்கள் அக்காள் தங்கை-இவர்கள் மாமன் மச்சினன்,என பழகிப்பழகி,தாரத்தின் மீது ஒருவகை பாசம்-தங்கை மீது ஒருவகை பாசம் என மனம் பக்குவம் அடைந்து,மாறுபட்டவர்கள் கூடி இனவிருத்தி ஏற்படுவதுதான் சிறப்பு என விஞ்ஞானமே ஒப்புக்கொள்கிறது.இதற்காகத்தான் ஜாதிகளிலும் குலங்கள் என்ற பிரிவுகளோ? எப்படியோ நம் முன்னோர்கள் நல்லெண்ணத்துடன்,ஊக்கமுக்,ஆக்கமும் கொண்டு இனவிருத்திக்காகத்தான் இப்பிரிவுகளை ஏற்படுத்தியிருப்பாரகளேயல்லாது நிச்சயம் சச்சரவுகளுக்காக அல்ல.
                    ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் பெயர் உண்டு.அவன் வசிக்கும் தெரு-கூடி வாழும் ஊர்,-வட்டம்-மாவட்டம்-மாநிலம்-தேசம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர்.ஒவ்வொன்றையும் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள பெயர்கள் தேவை.இனத்தால்,மொழியால்,தொழிலால்,பண்பாடுகளால்,பழக்க வழக்கங்களால்,இறைவழிபாட்டால்- இடத்திற்கிடம் மாறுபட்ட காரணத்தால் பல மதம்,பல ஜாதி,பல் பெயர்கள்,இருந்துவிட்டு போகட்டுமே.எல்லோருக்கும் போய் சேருமிடம் ஒன்றுதானே.அதுவரை அனைவருடனும் அன்புடனும் கருணையுடன் வாழ்ந்துவிட்டு போவோமே.இந்த வாழ்க்கைக்கும் ஓர் சீரான பாதை வேண்டும்.ஒன்றுக்கடுத்தது மற்றொன்று  என படிப்படியாக வரவேண்டும்.ஒவ்வொருவனும்
இச்சமுதாத்திற்கு ஏதோ ஒரு வகையில் சேவை செய்தாக வேண்டும் அது நம் கடமை.
                    முதலில் “தன் நலம் காத்தல்” பின் தன் “தன் குடும்பநலம் பேணுதல்” பின் தன் சமுதாய (உற்றார்,உறவினர்) நலத்தில் அக்கரை,அதன் பின் பிறந்த நாட்டின் மீது பற்று.பிறகு உலக நல சேவை என படிப்படியாகத்தான் சேவை தொடரவேண்டும் நிச்சயமாக ஒவ்வொருவரும் இந்த அயிந்து படிகளிலும் சேவை செய்தாக வேண்டும்.எதில் எத்தனை சதவிகிதம் என்பது அவரவருடைய வாய்ப்புக்கும் வசதிக்கும் தகுந்தாகும்.தானும் தன் குடும்பம் மட்டுமே போதும்-அவர்கள் நலம் மட்டுமே குறிக்கோள் என வாழ்பவன் மனிதனே அல்ல,மிருகத்திற்கு சமம் தான்.
                    பிறந்து வளர்ந்த சமுதாயத்திற்கு செய்யும்பணி தன் குடும்பத்துப்பணியின் விரிவாக்கமே ஆகும்.தன் குடும்பம்,தன் உற்றார் உறவினர் என விரித்து சமுதாயமாக மலர்ந்துள்ளதே தவிர வேறொன்றும் அல்ல.தன் குழந்தைகளை நன்கு படிக்கவைத்து நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் வேறுயார் அக்கரை கொள்வார்கள்.அதே போல் விரிவக்கப்பட்ட,நீ பிறந்த உன் சமுதாய மக்கள் நலத்தில்,நீதானே அக்கரை கொண்டாக வேண்டும்.நீ பிறந்து வாழ்ந்து வரும் சமுதாயம் தாழ்ந்து மதிப்பும் மரியாதையும் இழந்து போனால் அதில் உள்ள தனி மனிதனான உனக்கு மதிப்பும் மரியாதையும் எப்படி கிடைக்கும்?உன் குடும்பத்தையும்-சமுதாயத்தையும் மறந்துவிட்டு உதரித் தள்ளிவிட்டு நீ பிறந்த சமுதாயத்திற்கு சேவை செய் என் யாரும் கூறவில்லை.நல்ல குணவானாக இரு.உன் குடும்பத்தை கவனி.அடுத்து முதல் பணியாக நீ பிறந்து வளர்ந்த உன் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக
கொஞ்சமாவது செயல்படு.உன்னுடைய சமுதாயத்தின் ஒற்றுமையும் பலமும்தான் உன்னை உயர்ந்தவனாக்கும் அதற்குப்பிறகு தான் உனக்கு அரசியல் கட்சி இன்னும் பலபல.
                    ஆகையினால்,நாம் ஒவ்வொருவரும் முதற்பணியாக நம் குழந்தைகளை, நமது சமுதாய குழந்தைகளை நல்லொரு பிரஜைகளாக ,அறிவாளிகளாக,உயர்கல்வி பெற்றவர்களா, உயர்ந்த பண்பாளர்களாக,ஜாதிமத பேதமற்ற அனைத்து மக்களோடும் சகோதர பாசத்தோடு பழகும் பக்குவமுடையவர்களாக மாற்றிட பாடுபடுவோம் என சபதம் எடுத்துக்கொள்வோமாக. அதே நேரத்தில் அக்கிரமமாக, அநியாயமாக நம்மை யாரும் சீண்டிப்பார்க்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கும் அளவிற்கு நமது ஒற்றுமையையும் பலத்தையும் உயர்த்திக்கொள்ள பாடுபடுவோம்.ஆண்டாண்டு காலமாக பெயர் சொல்லி பழகிவிட்ட ஜாதி பெயரை வைத்து சங்கம் ஏற்படுத்தியதாலேயே நாம் யாரும் ஜாதி  பித்து கொண்டவர்கள். வெறி கொண்டவர்கள் அல்ல. அதே நேரத்தில் நியாமான காரணங்களுக்காகவும், நமது சமுதாய மக்களுக்கு எங்கேனும் அநீதி எற்படுமானால் போரடும் புலிகளாக மாறிவிடுவோம் என மற்றவர்கள் அறியட்டும்.
                   அன்பர்களே! நம் குழந்தைகள், நம் உற்றார் உறவினர் என்ற கூட்டுக்குடும்ப( சமுதாயம்) நம் மக்களின் முன்னேற்றத்தில் அக்கரை காட்டுங்கள். குறிப்பாக இளைஞர்கள் துள்ளி எழுந்து வாருங்கள். முடிந்தவரை எவ்வகையிலேனும் நம் சமுதாய சங்க பணிகளுக்கு உதவுங்கள்.பெரியவர்கள் நம் சங்க பணிபுரிபவர்களை ஊக்குவியுங்கள்.நமது சமுதாயம் முன்னேற்றம்
அடைந்தால் தான் நமக்கு பெருமை.நாம் பிறந்த சமுதாயம் கேட்பாரற்று சீரழிந்து போனால் தனி மனிதனாக நீங்கள் என்னதான் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும்,மற்றவர்களால் மதிக்கப்படமாட்டீர்கள். தூற்றப்படுவீர்கள்.
                    ஆகவே நீங்கள் பிறந்த உங்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் உங்கள் பங்கு என்ன? இதுவரை இல்லாதிருத்தால் அதை இன்றே துவக்குங்கள். அதற்குத்தான் இன்று கோவையில் “ஒக்கலிகர் பவன்” என்றோர் கலங்கரை விளக்கு ஏற்றப்பட்டு உள்ளது.பொருள் தாரீர்,உடலுழைப்பு தாரீர்,ஆலோசனை தாரீர்,ஊக்கம் தாரீர்.
                எந்த ஒரு பொது சேவையிலும் சிறு சிறு  சங்கடங்கள்,பிரச்சனைகள் எழத்தான் செய்யும், அவைகளையே பெரிதாக்கி நம் பொது நோக்கத்தையே சீர் குலைக்க செய்யாமல் பொறுமைகாத்து,சினம் தவிர்த்து,எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சமுதாய முன்னேற்றமே நம் அனைவரது குறிக்கோள் என சபதம் எடுத்து “ஊர் கூடி தேர் இழுப்போம்” வாரீர்! வாரீர்! என அன்புடனும் உரிமையுடனும் அழைக்கிறோம்.
                   நமக்கெல்லாம் யானை பலமாக, நம் சமுதாயத்திற்கு இறைவன் தந்த வரப்பிரசாதமாக கொங்கு கொடைவள்ளல் திரு.ஓ.ஆறுமுகசாமி அண்ணார் அவர்கள் நமக்கு எப்பொதும் துணையிருக்கிறார்.இப்பேர்பட்ட ஓரு மகான் வாழும் காலத்தில் நம் ஒக்கலிக சமுதாயம் கல்வி,தொழிழ்,விவசாயம் போண்றவைகளில் முன்னேறி மதிப்பும், மரியாதையும் பெறவில்லையெனில், பின் எப்போது? இளைஞர்களே! வாலிபர்களே,பெரியோர்களே,என அன்பு சொந்த
பந்தங்களே,வீறுக்கொண்டு விழித்தெழுங்கள்,கிளை சங்கங்களை பலப்படுத்துங்கள்.ஓங்கட்டும் ஒக்கலிக மக்களின் ஒற்றுமை.திக்கெட்டும் ஒலிக்கட்டும் நம் மக்களின் குரல்.

              வாழ்க வளமுடன்   
              
             இங்ஙனம்,அன்புடன்
          R.வெள்ளிங்கிரி (DSP ஓய்வு) 
தலைவர்,கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கம்  

Sunday, January 31, 2010

ஒக்கலிகர் மகாஜன சங்க முப்பெரும் விழா

நன்றி தினமணி மதுரை
ஒக்கலிகர் மகாஜன சங்க முப்பெரும் விழா

First Published : 21 Sep 2009 03:20:40 AM IST

 பழனி, செப். 20: பழனியில் ஒக்கலிகர் (காப்பு) மகாஜன சங்கத்தின் 53-வது மகாசபைக் கூட்டம், மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா, இலவச தங்கும் விடுதி திறப்பு ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

 ஸ்ரீவிஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ஆறுமுகசாமி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திருமலைராஜ், தமிழக சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் காந்திராஜன், கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பார்த்திபன், கிருஷ்ணகுமார், அச்சுதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 செயலரும், வேடசந்தூர் ஊராட்சித் தலைவருமான பிரியம் நடராஜன் வரவேற்றார்.

 சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அப்பாஜி ராஜ்குமார், ராமசாமி, சக்தி உள்ளிட்ட பலர் வழங்கினர்.

 சங்க பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

 இதே தேதியில் மற்றொரு பிரிவினர் இங்கு போட்டி நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து டி.எஸ்.பி. தங்கவேலு தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்
.நன்றி தினமணி

Monday, December 28, 2009

தினவிழா



  ஒக்கலிகர் தினவிழாவில் கொங்கு கொடைவள்ளல் திருO.ஆறுமுகசாமி அவர்கள் பேசும்போது

   27.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சுமார் 10:30 மணியளவில்ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில்  கோலகலமாக தெடங்கியது,                                                                                                                 ஈரோடு,கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கங்களின் 14 -ஆம் ஆண்டு ஒக்கலிகர் தினவிழா.

சமுதாய இளைஞர்கள்,இளைஞிகள்,பெண்கள், கல்வியாளர்கள்,தொழில் அதிபர்கள்,சிறப்பு அழைப்பாளர்கள்,முதலிடங்களை பெற்ற பள்ளிகல்லூரி மாணவமாணவிகள், சமுதாயபெரியவர்கள் மற்றும் விவசாயிகள் என கூட்டம் களைகட்டியது.
                         தலைமை:திரு.V.R. திம்மராயப்பன்
                     [தலைவர் ஈரோடு மாவட்ட ஒக்கலிகர் மகா ஜன சங்கம்]
       சிறப்பு விருந்தினர்:திரு.O. ஆறுமுகசாமி
               [நிறுவனர் ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை,கோவை.]
                வரவேற்புரை: திரு.A.M.சின்னராஜன்
                [செயலாளர் ஈரோடு மாவட்ட ஒக்கலிகர் மகா ஜன சங்கம்]

                              முன்னிலை
திரு. P.R.ராமசாமி தலைவர் கோ.மா.ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை
 கொடை வள்ளல் திரு O.ஆறுமுகசாமி தலைவர் ந.பொ.சங்கம்
திரு.T.R.அட்டியன்ணணன் Ex ஊராட்சி ஒன்றிய தலைவர்,TN பாளையம்
திரு.N.கிருஷ்ணசாமி இயக்குநர், இந்தோ ஸ்விஸ் சிந்தெடிக் ஜெம் (பி) லிட்
திரு.R.வெள்ளிங்கிரி தலைவர்,கோ,மா. ஒக்கலிகர் மகாஜன சங்கம்
                                 சிறப்பு அழைப்பாளர்கள்
திரு.P.L.சிவனப்பன் இயக்குனர், பண்ணாரி அம்மன் சக்கரை ஆலை
திரு.M. நடராஜ் இணை நிர்வாக அறங்காவலர், கல்வி காப்பு அறக்கட்டளை.
திரு.G.K. சுப்பிரமணியன் தலைமையாசிரியர் (ஓய்வு) T N பாளையம்
திரு.P.K.சந்திரன் இயக்குனர், சக்தி சர்க்கரை ஆலை,ந. புளியம்பட்டி.
திரு.Dr.M.R.சிவசாமி தலைவர்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திரு.S.V.கிரி சொலவனூர்.
திரு.S.V. வெங்கிடு கட்டிட காண்ட்ராக்டர்,சத்தியமங்கலம்.
திரு.B.K. தாசப்பன் அறங்காவலர், தாசப்பகவுடர் ஹாஸ்டல் பங்களாபுதூர்.
திரு.K.T.சிவக்குமார் அறங்காவலர், தாசப்பகவுடர் ஹாஸ்டல் பங்களாபுதூர்
திரு.P.K.சுப்பிரமணியம் Ex ஊராட்சி மன்ற தலைவர், புதுப்பீர்கடவு.
திரு.Dr.K.லட்சுமணன் ஆசிரியர்,ஒக்கலிகர் புல்லட்டின்.
திரு. Dr.M. ரங்கசாமி தலைவர், ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை கல்விக்குழு
திரு.M.சின்னராஜ் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்.
திரு.M.K.K. மோகன் கெளரவத்தலைவர், காரமடை ஒக்கலிகர் சங்கம்.
திரு.K.முத்துசாமி செயலாளர், நஞ்ஞையாலிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி.

திரு.B.N.ராஜேந்திரன்அறங்காவலர்,கோ.மா.ஒக்கலிகர்பொதுநலஅறக்கட்டளை.
திரு.A.ஈஸ்வரன் செயலாளர், கோ.மா.ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை.
திரு.N.மனோகர் பொருளாளர், கோ.மா.ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை.
திரு.T.சின்னசாமி பொருளாளர், கோ.மா.ஒக்கலிகர் மகாஜன சங்கம்.
திரு.R.M.சோமசுந்திரம் பொருளாளர், நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.C.V.குமாரசாமி பொருளாளர், ஈ.மா. ஒக்கலிகர் மகாஜன சங்கம்.
திரு.C.R. செல்வராஜ் மாவட்ட ஊரட்சி உறுப்பினர்.
திருமதி.அருக்காணிராஜேந்திரன் மாவட்ட ஊரட்சி உறுப்பினர்.
திரு.சக்திவேல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்.
திரு. சுப்பையன் தலைவர், ஊராட்சி மனறம் முடுக்கன்துறை.
திரு. C.R. தங்கவேல் தலைவர், ஊராட்சி மன்றம் சிக்கரசம்பாளையம்.
திரு.A.K.இளங்கோ தலைவர், ஊராட்சி மன்றம் கொமரபாளையம்.
திருமதி.சரஸ்வதி ராஜேந்திரன் தலைவர், ஊராட்சி மன்றம் புங்கார்.

திரு.ராஜாமணி சிவசாமி  தலைவர் ஊராட்சி மன்றம் பசுவபாளையம்.
திரு.P.A. மாரப்பன் உதவி தலைவர்,ஈ.மா. ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.V.R.யோகனந்தன் உதவி செயலாளர் ஈ.மா. ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.P.N. செல்வராஜ் உதவி செயலாளர் ஈ.மா. ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.M.கந்தசாமி துணைத்தலைவர்,கோ.மா ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.S.V.ராமசந்திரன் துணைத்தலைவர்,கோ.மா ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.T.முத்துசாமி துணை செயலாளர்,கோ.மா ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை.
திரு.காரை பொன்னுசாமி துணை செயலாளர்,கோ.மா ஒக்கலிகர் மகாஜனசங்கம்.

திரு.K.நஞ்சையன் துணை தலைவர்,நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.R.சாம்ராஜ் துணை தலைவர், நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.U.சோமசுந்தரம் துணை செயலாளர், ,நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.R. ராமசாமி தலைவர், மேட்டுப்பாளையம் வட்டாரம்.
திரு.K.R.சுப்பையன் தலைவர், சிறுமுகை வட்டாரம்.
திரு. T.S ரங்கராஜ் தலைவர், தொண்டாமுத்தூர் வட்டாரம்.
திரு.S.நாராயணசாமி தலைவர், கிணத்துகடவு வட்டாரம்.
திரு.G.சுப்பையன் தலைவர், அன்னூர் வட்டாரம்.
திரு. G.சதானந்தம் தலைவர், கோவை தெற்கு வட்டாரம்.
திரு.V.S  தம்பு தலைவர், கணபதி வட்டாரம்.
திரு.R.ராஜாமணி கல்வி சேமிப்பு குழு உறுப்பினர், காரமடை.
சுரபி மக்கள் நலமன்றத் தலைவர், செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள்.

                                             படத் திறப்பு
1.கல்வி வள்ளல் வீ.தாசப்பகவுடர் மாணவர் தர்ம விடுதி ஸ்தாபகர்.
2.தெய்வத்திரு.T.T.S. திப்பையா நிறுவனர், கல்விகாப்பு அறக்கட்டளை.
3.தெய்வத்திரு.P.S.வீரபத்திர கவுடர் Ex. ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்.
4.Dr.B.B.சுந்தரேசன் முன்னாள் துணை வேந்தர்,சென்னை பல்கலை கழகம்.

                            சமுக சிறப்பு கல்வியாளர்கள் 
Dr.R.K.சிவனப்பன் நீர்வள மேலாண்மை விஞ்ஞானி.
 Dr.A.M.நடராஜன் Chief Excutive Officer பண்ணாரி அம்மன் பொறியியற் கல்லூரி.
திரு.P.R.அருள்மொழி அரசு வழக்கறிஞர், கோவை.
Dr.M.சுப்பிரமணியம் பேராசிரியர், கோபி கலைக் கல்லூரி.
திரு.N.ஆறுமுகம் தலைமை பொறியாளர் (ஓய்வு),த.மி.வா.
திரு.R.பொருசப்பன் தலைமை பொறியாளர் (ஓய்வு) த.மி.வா.
திரு.K.ரங்கராஜ் மேற்பார்வை பொறியாளர் ,த மி.வா. 

Dr.P.சுப்பையன் பதிவாளர்,தமிழ் வேளாண்மை பல்கலைக்கழகம்.
Dr.R.பழனிச்சாமி பதிவாளர், அண்ணா பல்கலைக்கழகம்.
Dr.T.V.ரமனிகாந்த் ENT நிபுணர்,KMCH கொவை.
திரு.கனகராஜ் வழக்கறிஞர்,பு.புளியம்பட்டி.
திரு.R.பார்த்திபன், வழக்கறிஞர்,தூக்கநாய்கன்பாளையம்.
திரு.ரமேஷ் வழக்கறிஞர்,சிக்கரசம்பாளையம்.
திரு.M..L.ரங்கராஜ் wing comdr (Retd.) கோவை.

                                         சிறப்பு தொழில் அதிபர்கள்
திரு.T.C.சுகுமார் நிறுவனர், ஆதித்யா பொறியியற் கல்லூரி, கோவை.
திரு.R.ரவிச்சந்திரன்  ரோசன் TMT குருப்ஸ்,கோவை.  
திரு.R.இளங்கோ பண்ணாரி அம்மன் ஸ்டீல்ஸ்,கோவை.
திரு.S ராஜேந்திரன் கோயமுத்தூர் சூப்பர் அலாய்ஸ்,கோவை.
திரு.S.கனகராஜ் சுமேகா இண்டஸ்ட்ரீஸ்,கோவை.
திரு.R.சுரேஷ்குமார் பிரசன்னா கேஸ்,சத்தி.
திரு.N.சரவணபவன் கலா டெக்ஸ்,கோவை.
                                       பாராட்டு பெறுபவர்கள்  
திரு.S.மெளலீஸ்வரன் +2ல் முதல் மதிப்பெண் பெற்றவர்,பகுத்தம்பாளையம்.
திரு.T.N.வெற்றிவேல் "நம்மவர்கள்" பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்.   
திரு.சிறுமுகை காரப்பன் நெசவு ஆராய்ச்சியாளர்,சிறுமுகை.
திரு.S.தமிழரசு www.vokkaligar.org. Website வெளியீட்டாளர்.
திரு.L.கனகலட்சுமி பட்டிமனற்ப் பேச்சாளர், கோவை.
                                         நன்றியுரை
திரு.T.N. பழனிச்சாமி செயலாளர்,கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கம்.
                                      விழா தொகுப்பாளர்கள்
திரு.தேவேந்திரன் உதவி தலைமையாசிரியர்,ஆண்கள் மே.நி.பள்ளி,சத்தி.
திரு.R.ரத்தினசாமி தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி,தருமபுரி

                             தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.