அருள்மிகு திம்மராயப் பெருமாள் திருக்கோயில்
கா.புங்கம்பாளையம்
கெந்தேர் குலப் பெண்மக்கள் தெய்வமாகிய
அருள்மிகு வீரமாஸ்தியம்மன் பிரதிஸ்டை விழா
பேரன்புடையீர்!
நிகழும் விக்ருதி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 26-ஆம் நாள் {12-12-2010}
ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி,சதய நட்சத்திரம் சித்தயோகம்,மகர லக்கினம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள், பகதூரிலிருந்து கெந்தேர் குலப் பெண் தெய்வமாகிய அருள்மிகு வீரமாஸ்தியம்மன் தெய்வத்திருவுருவத்தைக் கொண்டுவந்து பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வீரமாஸ்தியம்மன் கோயிலில் நிலை நாட்டும் [பிரதிஸ்டை செய்யும்] விழா நடைபெற்வுள்ளது.ஆகவே கெந்தேர் குலப் பெண்மக்களும்,ஆண் மக்களும் தவறாது வந்திருந்து விழாவினைச் சிறப்புற நடத்தித் தந்து அம்மனின் திருவருள் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்
இக்கோயிலைச் சார்ந்த பெள்ளீர் குலம்,ஆரநாட்டுக் குலப் பெண் மக்கள்ளும்,ஆண் மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
12-12-2010 ஞாயிற்றுக்கிழமை :
காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் : யாக பூசை நடத்தி அம்மன் பிரதிஸ்டை செய்தல்
காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் : அலங்கார பூசை
மதியம் 12.00 மணிக்கு : அன்னதானம்
இங்ஙனம்
கெந்தேர் குலம் பெண் மக்கள்,ஆண் மக்கள் கோயில் அறங்காவலர்கள்
அ/மி திம்மராயப் பெருமாள் கோயில்,கா புங்கம்பாளையம்
Friday, December 3, 2010
Subscribe to:
Posts (Atom)