நன்றி தினமலர்:
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011,03:00 IST
ஒக்கலிகருக்கு முன்னுரிமை கோரி தீர்மானம்
மேட்டுப்பாளையம் : தமிழகத்தில் 17 சட்டசபை தொகுதிகளில் ஒக்கலிக சமுதாய மக்கள் கணிசமாக உள்ளதால், சட்டசபை தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி தலைவர்கள் இந்த இன வேட்பாளருக்கு முன்னுரிமை தர கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் ஒக்கலிகர் சமுதாய இளைஞர் அணியின் ரத்ததான இயக்க விழிப்புணர்வு விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒக்கலிக சமுதாய இளைஞர்கள் ரத்ததான இயக்கம் துவங்கி அனைத்து சமுதாய மக்களுக்கும் இலவசமாக ரத்தம் கொடுக்கும் சேவைக்கு பாராட்டுக்கள். மேட்டுப்பாளையம் உட்பட 17 சட்டசபை தொகுதிகளில் ஒக்கலிக சமுதாய மக்கள் கணிசமாக உள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தலில் இச்சமுதாய வேட்பாளர்களுக்கு முன்னிரிமை அளிக்க வேண்டும்.ஒக்கலிக சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவில் சேர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு "பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ்' திட்டம் கொண்டு வர வேண்டும். விளை பொருளுக்கு விலை நிர்ணயம் வேண்டும். விவசாய இடு பொருளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். மணிக்கு ஒரு மின்சார ரயில் சேவையை, கோவை - மேட்டுப்பாளையம், கோவை - திருப்பூருக்கு அளிக்க வேண்டும்உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேட்டுப்பாளையம் வட்டார ஒக்கலிகர் சங்க தலைவர் ராமசாமி வரவேற்றார். நகர மன்ற தலைவர் சத்தியவதி முன்னிலை வகித்தார். விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, ஒக்கலிகர் சங்க தலைவர் வெள்ளிங்கிரி, பொதுப்பணி சங்க தலைவர் நஞ்சையன், ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், கவுரவ தலைவர் மோகன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜோதிமணி உட்பட பலர் பேசினர். கவுன்சிலர் பழனிசாமி நன்றி கூறினார். இளைஞர் அணி சார்பில் நடந்த ரத்ததான முகாமுக்கு, "இந்தோ - ஸ்விஸ் சிந்தடிக் ஜெம்' ஆலை நிர்வாக இயக்குனர் கிருஷ்ணசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். வி.என்.கே., கல்லூரி முதல்வர் ரேவதி முன்னிலை வகித்தார்.டாக்டர்கள் நஞ்சுண்டப்பன், சுதாராணி குழுவினர் பரிசோதனை செய்து நன்கொடையாளர்களிடம் ரத்தம் பெற்றனர்.
Wednesday, March 30, 2011
Subscribe to:
Posts (Atom)