ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் வட்டம்- புஞ்சை புளியம்பட்டிக்கு அருகில் மாதம்பாளையம் கிராமம் கீழ்முடுதுறையில் அமைந்துள்ள
ஒக்கலிகர் இன பட்டக்கார குல மக்கள் குலதெய்வம்
அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத
அருள்மிகு திம்மராயப் பெருமாள் திருக்கோவில்
ஜீரணோதாரண மஹா ஸம்ப்ரோக்க்ஷண
மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்
நாள் : 29-06-2012 ஆனி 15 வெள்ளிக்கிழமை
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான நந்தன வருடம் ஆனி மாதம் 15 ம் தேதி (29.6.2012) வெள்ளிக்கிழமை வளர்பிறை தசமி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்குமேள் 10.00 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத அருள்மிகு திம்மராயப் பெருமாளுக்கு மஹா கும்பாபிஷேகம் காரமடை ஸ்ரீ வேதவ்யாச சுதர்சன பட்டர் சுவாமிகள் தலைமையில் கொடைவள்ளல் கல்வித் தந்தை திரு.ஓ ஆறுமுகசாமி அவர்கள் முன்னிலையில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் வந்திருந்து பெருமாள் திருவருள் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
28-06-2012 வியாழக்கிழமை
மாலை 4-00 மணிக்கு மேல்
இரவு 8-00மணிவரை
அநுக்ஞை -அன்க்குரார்பணம்-ம்ருத் சங்கரணம் பாலிகா ஸ்தாபனம் - கும்ப ஆவாகணம் ஹோமம் திவ்வியபிரபந்தம் வேதபாராயணம் -திருவாராதனம் சாற்றுமுறை தீர்த்த பிரசாதம்
இரவு 10-00 மணிக்கு விமான கலச ஸ்தாபனம்
29-06-2012 வெள்ளிக்கிழமை
காலை 6-00 மணிமுதல் ஹோமம் -வேதபாராயணம்,திவ்யபிரபந்தம்- பூர்ணஹுதி
காலை 9-00 மணிமுதல் 10 -00 மணிவரை மஹா சம்ப்ரோக்சண மஹாகும்பாபிஷேகம் திருவாராதனம் வேதபிரபந்த் சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம்,பாகவத பஜனை கோஷ்டி பாகவத திதியாராதனை
29-06-2012 வெள்ளிக்கிழமை காலை 8-00 மணிமுதல் ஆதிமாதையனூர் பஜனைகுழுவின் பஜனை நடைபெறும்
காலை 10-00 மணிமுதல் அன்னதானம் நடைபெறும்
மண்டபம் திறப்புவிழா
29-06-2012 வெள்ளிக்கிழமை காலை 8-30 மணிக்கு
தலைமை
பட்டக்கார குலச் செம்மல்
கொடைவள்ளல் கல்வித் தந்தை
திரு.ஓ ஆறுமுகசாமி அய்யா அவர்கள்
தொழிலதிபர்.
நிர்வாக இயக்குனர்,செந்தில்குழுமம் நிறுவனர், ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை-கோவை
முன்னிலை
திரு.V.Rதிம்மராயப்பன் B.E அவர்கள்
தலைமைபொறியாளர்[பணி ஓய்வு]
தமிழ்நாடு மின்வாரியம்,புதுவடவள்ளி
இங்ஙனம்
அறங்காவலர்கள் குழு
விழாக்குழு ,
ஒக்கலிகர் மற்றும் ஒக்கலிகர் இன
பட்டக்காரகுலமக்கள்
30-06-2012 சனிக்கிழமை முதல் 24 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறும்