Sunday, January 31, 2010

ஒக்கலிகர் மகாஜன சங்க முப்பெரும் விழா

நன்றி தினமணி மதுரை
ஒக்கலிகர் மகாஜன சங்க முப்பெரும் விழா

First Published : 21 Sep 2009 03:20:40 AM IST

 பழனி, செப். 20: பழனியில் ஒக்கலிகர் (காப்பு) மகாஜன சங்கத்தின் 53-வது மகாசபைக் கூட்டம், மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா, இலவச தங்கும் விடுதி திறப்பு ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

 ஸ்ரீவிஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ஆறுமுகசாமி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திருமலைராஜ், தமிழக சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் காந்திராஜன், கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பார்த்திபன், கிருஷ்ணகுமார், அச்சுதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 செயலரும், வேடசந்தூர் ஊராட்சித் தலைவருமான பிரியம் நடராஜன் வரவேற்றார்.

 சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அப்பாஜி ராஜ்குமார், ராமசாமி, சக்தி உள்ளிட்ட பலர் வழங்கினர்.

 சங்க பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

 இதே தேதியில் மற்றொரு பிரிவினர் இங்கு போட்டி நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து டி.எஸ்.பி. தங்கவேலு தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்
.நன்றி தினமணி