Thursday, November 11, 2010

கொடியேற்று விழா

நன்றி:24 dunia

கம்பம், நவ. 2:கம்பத்தில் ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் சார்பில் கொடியேற்று விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவுக்கு சக்தி ஸ்டோர் வாசகர் தலைமை வகித்தார். அக்ரிமுருகேசன், ராஜேந்திரன், திருப்ணிக்குழு உறுப்பினர் வெங்கடேசன், சித்திரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காந்திஜி பூங்கா, கூழத்தேவர் முக்கு, நாட்டுக்கல், கிருஷ்ணாபுரம், ஜாலிமரம், நந்தகோபாலன் கோயில் பகுதி, கெஞ்சையன்குளம், சுக்காங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சங்கத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி மாவடடங்களுக்கான துணைத் தலைவர் .கே.எம். செந்தில்குமார் சமுதாயக் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

Sunday, November 7, 2010

மின் தமிழுக்கு நன்றி


விவசாயத்திற்காக விரைவாக இரண்டு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கிய கலைஞர் அய்யா அவர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சார்பாகவும் ஒக்கலிக் கவுண்டர்கள் சங்கம் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, October 11, 2010

ஒக்கலிகர் சங்க பரிசளிப்பு விழா

தினமலர்:ஆகஸ்ட் 28,2010,21:23

பழநி: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம் சார்பில் பழநியில் மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா நடந்தது. சங்க தலைவர் பி.எஸ்.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.நடராஜன் வரவேற் றார். அரசு கொறடா சக்கரபாணி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை ஸ்ரீ விஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். ராமகிருஷ்ணன் எம். எல்.ஏ., கோவை ஒக்கலிகர் பொதுநல அறக் கட்டளை பொருளாளர் வெள்ளிங் கிரி, பள்ளி தாளாளர்கள் கூடலூர் அச்சுதன், கே. கே.பட்டி கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க பொரு ளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

ஒக்கலிகர் அறக்கட்டளை முப்பெரும் விழா

ஆகஸ்ட் 27,2010, தினமலர்
துடியலூர் : துடியலூரில் ஒக்கலிகர் அறக்கட்டளை முப்பெரும் விழா நடந்தது. சங்க செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். டாக் டர் ராமசாமி தலைமை வகித்தார். நண்பர்கள் பொதுப்பணி சங்க தலைவர் ஆறுமுகசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடை வழங்கப்பட்டது. விழாவுக் கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை, ஒக்கலிகர் மகாஜன சங்கம் மற்றும் நண்பர்கள் பொதுப்பணி சங்கம் செய்து இருந்தது. விழாவில் காரமடை, மேட்டுப்பாளையம், துடியலூர் வட்டார ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

Friday, July 30, 2010

வெள்ளியங்கிரி யாத்திரை

‘பூலோக கயிலாயம், தென்கயிலை, வெள்ளிமலை, வெள்ளியம்பலம் என பல திருநாமங்களால் அழைக்கப்
படும் வெள்ளியங்கிரியே, தட்சிண கயிலாயம்’ என்று ஈசன் உரைத்த செய்தியை நந்தி தேவர் முருகனுக்குச் சொல்ல, முருகன் நாரதமுனியிடம் தெரிவித்தார். அப் புனிதத்தலத்தை தரிசிக்க ஆவல்கொண்ட நாரதர், கொங்கு மண்டலத்தின் மூலஸ்தானமாக விளங்கும் வெள்ளியங்கிரியில் ஏறி பெருமானையும், அம்மையையும் தரிசித்தார். பின்னர், காஞ்சி நதியில் தீர்த்தமாடி, கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்தார். அவர் ஸ்தாபித்த லிங்கம், நாரதேஸ்வரர்.
காலவ முனிவர் சிவலிங்க உபாசனைக்குத் தகுந்த இடமாகக் கருதியது வெள்ளியங்கிரியைத்தான். காஞ்சி நதியின் கரையில் இவரும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பஞ்சாட்சர மந்திரத்தை பதினையாயிரம் முறை ஜெபித்து தவமியற்றினார். இவர் ஸ்தாபித்த லிங்கம் காலவேஸ்வரர்.
இவ்விதம் ஈசனின் திருமுடியிலிருந்து உருகி
யோடி வரும் காஞ்சி நதியோரத்தில் நடந்தால்
பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் வரைக்கும் மாமுனிகள்
ஸ்தாபித்த ஏராளமான லிங்கங்களை தரிசிக்கலாம்.
வெள்ளியங்கிரியில் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் காசியில் 1000 பேருக்கு அன்னதானம் செய்த பயன் என்கிறது பேரூர் புராணம். ஜனவரி தொடங்கி மே வரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இம்மலைக்கு வருகிறார்கள். இக்காலத்தில், ஏராளமானோர் அன்னதானம் செய்வார்கள். இதற்கென்றே, அடிவாரத்தில் பத்திரச் செட்டியார் மடம், தேவர் மடம், புரவிப்பாளையம் மடம், சுக்கிரப்ப கவுண்டர் மடம், பட்டிபோயன் மடம் என 10க்கும் மேற்பட்ட மடங்கள் உள்ளன. இங்குவந்து 200க்கும் மேற்பட்ட அன்னதானக் குழுக்கள் பக்தர்களின் பசி போக்குகிறார்கள்.
இப்போது நாம் இருப்பது நான்காம் மலை. இது அநாகதம் என்ற வாயுவின் அம்சம். இதன் தொடக்கம் மிகக்கடுமையானது. இதை முழங்கால்திட்டு என்பார்கள். ஒவ்வொரு அடியையும் முழங்கால் அளவுக்குத் தூக்கிவைத்து நடக்கவேண்டும். சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள முழங்கால் திட்டைக் கடந்துவிட்டால் யாத்திரையில் முக்கால்பாகத்தை தாண்டிவிட்டதாகக் கருதலாம். அடுத்து சீதை வனம். அரிய மூலிகைகள் அடர்ந்த காடு. காயசித்தி, யோகசித்தி தரும் மரங்கள், நரை, திரை, மூப்பு ஒழித்து சிரஞ்சீவியாக வாழச்செய்யும் மரங்கள், மாங்கிசபேதி, அங்கிசபேதி, அயபேதி, அன்னபேதி மூலிகைகள், நவமணிகள் விளையும் கொடிகள் மிகுந்த இந்த சீதைவனத்தில் ஸ்படிகம் போன்ற அரிய கற்களும் உள்ளன. இம்மலைக்குத் தென்புறத்தில் உள்ள ஏமகிரியில் ஒரு தாமரை ஓடை உண்டு. அதில் மூழ்கி எழுந்தோர் சகல சித்திகளும் பெறுவர். அதனருகே உள்ள பால்கிணற்று நீரை அள்ளி அருந்தினால் ஆறு மாதங்கள் அன்ன, ஆகாரமின்றி வாழலாம் என்கிறது பேரூர் புராணம். இம்மலைவாழ் சித்தர்கள் இவ்விதம்தான் பசியை வென்றார்கள் போலும்.
வெள்ளியங்கிரியில் சீதை வனம் வந்ததெப்படி..?
சீதை வனம் மட்டுமல்ல... இம்மலையின் சரிவுப்பகுதியில் அனுமன் நதியும், ராமர் ஓடையும் கூட உண்டு. இந்த தொடர்பை உணர, கொஞ்சம் ராமாயணத்தை உணரவேண்டும். மாரீசன் பொய்மான்
வேடமிட்டு ஓட, அதன்மீது ஆவல்கொள்கிறாள் சீதை. ராமன் மானைத் தேடிப்போக, இலக்குவன் ராமனைத் தேடிப்போக, தனித்திருந்த சீதையைக் கவர்ந்து செல்கிறான் ராவணன். ஓடியது பொய்மான் என்பதை உணர்ந்த ராமனும், இலக்குவனும் சீதையைக் காணாமல் தவித்து சுதீக்ஷனனிடம் யோசனை கேட்கிறார்கள். அவன், இரளி மலைக்
குன்றத்தில் உள்ள பெண்தபசி சபரியிடம் அனுப்புகிறான். சபரி சுக்ரீவனை அறிமுகப்படுத்து
கிறாள். சுக்ரீவனின் அமைச்சனான அனுமனின் யோசனைப்படி, வாலியை வதம்செய்து அவனின் 70 வெள்ளம் சேனையை வசப்படுத்துகிறான் ராமன். அந்த சேனையை நான்கு பிரிவுகளாக்கி நான்கு திசைகளுக்கும் அனுப்பி சீதையைத் தேடப்பணிக்கிறான். தென்திசைக்குச் சென்ற படையில் இடம்பெற்ற அனுமன், விந்தமலை, ஏமகூடம்,
தண்டகமலை, பாண்டுமலை, சந்திரகாந்த மலை தாண்டி வெள்ளியங்கிரியிலும் தேடியலைந்தார். அனுமனின் கண், கருத்து, காட்சி எல்லாவற்றிலும் சீதையே இருந்தாள். அவ்வித நோக்கத்தோடு
அனுமன் வந்திறங்கிய இடமே சீதை வனம்.
இந்திரஜித்தின் பாணத்தால் இலக்குவன் நிலை
குலைந்து விழுந்த தருணத்தில், சாம்பவனின் ஆலோசனையின் பேரில் சஞ்சீவி மூலி கையை தேடிஅலைந்த அனுமன், அப்போதும் இந்த சீதை வனத்திற்கு வந்திருக்கலாம் என்று யூகிக்
கிறார்கள் கம்பன் ஆர்வலர்கள். மூலிகை வாசனை, குளுகுளு காற்றால் களைப்பு மிரண்டோடுகிறது. ஏற்ற, இறக்கங்கள் மிகுந்த பகுதி என்றாலும் மெல்லிய காற்று உடலில் பரவுவதால் பயணம் இதமாகத்தான் இருக்கிறது. பள்ளப் பகுதி தாண்டி சற்று சிரமமான ஒரு மேடு ஏறினால் சீதை வனம் முடிகிறது. மேட்டின் முகப்பில் ஒட்டர் சமாதி. வெள்ளியங்கிரி லிங்கேஸ்
வரனை முதன்முதலில் அடையாளம் கண்ட மனிதர். இவர், சிவபக்தியும் ஆசாரமும் கொண்ட லிங்காயத்தார் எனப்படும் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். மேய்ச்சல் தொழில் செய்த இவர் ஒருமுறை வெள்ளியங்கிரி மேல்மலை குகையில் ஆடு, மாடுகளை அடைத்து பட்டி போட்டிருந்தார். அப்போது, மேய்ச்சல் முடித்து ஆங்காரத்தோடு வந்த ஒரு காராம் பசு, பட்டியின் கதவை நெட்டித்தள்ளி, கன்றுக்கு பால் கொடுத்தது. தாயன்பு கிடைத்த மகிழ்வில் துள்ளிக்குதித்த கன்றுவின் கால்குளம்பு அருகில் இருந்த ஐம்முகம் கொண்ட புற்றின் மேல் இறங்கியது. அப்புற்றுக்குள் கன்றின் கால்குளம்பு சிக்கிக்கொள்ள, தாய்ப்பசு மனம் பொறுக்காமல் அந்த புற்றை தன் கொம்புகளால் குத்திப் பெயர்த்தது. அத்தருணம், புற்றுக்குள் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. இதைப் பார்த்து அதிர்ந்த ஒக்கலிகர், புற்றை முழுதாகத் தோண்ட... குளம்படியாலும், கொம்படியாலும் சிதைந்த ஐமுகலிங்கங்கள் வெளிவந்தன. இச்செய்தியை ஒக்கலிகர் வழியாக உலகம் அறிந்தது. அந்த ஒக்கலிகரே காலப்போக்கில் ஒட்டரானார். ஈசனின் திருவடியிலேயே கிடந்து காலம் கழித்த ஒக்கலிகர் உடல்நீத்த இடம்தான் ஒட்டர் சமாதி. கரடுமுரடான மலையில் கற்களைக் கொண்டு நடைபாதை அமைத்தது இவர்தான். அதுமட்டுமல்ல, களைப்பால் திணறும் பக்தர்களுக்கு உரமூட்டி ஈசனின் சந்நதிக்கு கொண்டு சேர்ப்பதும் இந்த புனிதர்தான்.

Wednesday, June 30, 2010

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி உலக அரங்கில் தமிழ்தேசியத்தை அடுத்தநிலைக்கு முன்னெடுத்துச் செல்லும் கலைஞருக்கு வாழ்த்துக்கள்



























Friday, June 11, 2010

கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

31/5/2010
மேட்டுப்பாளையம்:சிறுமுகை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் 21ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஐகோர்ட் நீதிபதி ரகுபதி தலைமை வகித்தார்.

அதிகம் மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மாணாவ,மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுத்தொகை வழங்கி, கவிஞர் வைரமுத்து பேசியதாவது:தன்னைப் போல் துன்பம் அடையக்கூடாது என்று நினைப்பவர் தான் உயர்ந்த மனிதர். கொடையில், சோறு, அரிசி, நெல் கொடுப்பது என மூன்று வகை உள்ளது. சோறு அன்றைய பசியையும்; அரிசி நாளைய பசியையும் போக்கும். ஆனால் நெல் நிலத்தில் விளைந்து பன்மடங்கு பலன் தரும். அதேபோல மாணவர்களாகிய நீங்கள் விதை நெல்லைப் போல் இருக்க வேண்டும்.கல்வி தான் சமுதாயத்தை மேம்படுத்தும். மதமும், அரசியலும் சமுதாயத்தை மேம்படுத்தாது. கல்வி தான் ஒரு மாணவருக்கு அழகை கொடுக்கும். கல்வியின் மூலம் மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முயற்சி செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி பேசும்போது ""மாணவர்கள் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக வளர வேண்டும். படிக்கும் போதே, பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்,'' என்றார்.மேலும்

""தமிழகத்தில் உள்ள 53 ஆயிரம் பள்ளிகளில், 1.45 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தனியார் பள்ளிகள் வியாபார நோக்குடன் செயல்படக் கூடாது என்பதற்காக, கல்விக் கட்டணம் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. எவ்வித கல்விக் கட்டணம் வாங்காமல் இப்பள்ளி நிர்வாகம், 1,400 மாணவர்களுக்கு இலவச கல்வியை அளிக்கிறது. இது அல்லாமல் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி வருகிறது. மாணவர்கள் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக வளர வேண்டும். படிக்கும் போதே பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
முன்னதாக ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி வரவேற்றார். கோவை ஐ.ஜி., சிவனாண்டி வாழ்த்திப்பேசினார். அதிக மதிப்பெண் பெற்ற 4,500 மாணவ, மாணவிகளுக்கு 8.75 கோடி ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.