நன்றி;Oneindia Mobile
தென் மாவட்டங்களில் காலூன்ற பல்வேறு பிரயத்தனங்களை ராமதாஸ் செய்து வருகிறார். ஆனால் திருச்சியைத் தாண்டி உள்ளமாவட்டங்களில் பாமகவுக்கென்று பெரிய சக்தி ஏதும் இதுவரைஉருவாகவில்லை. தென் மாவட்டங்களில் வன்னியர்கள்(வன்னியக் கவுண்டர்கள் என்றும் அழைக்கப்படுவது உண்டு) எண்ணிக்கை மிக மிக சொற்பமாக இருப்பதே இதற்குக் காரணம்.
இந் நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள கன்னட மொழி பேசுவோரை பாமக பக்கம் இழுக்க ராமதாஸ் தீவிர முயற்சிகள்மேற்கொண்டுள்ளார். கன்னட மொழி பேசும் கெளடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை, தேனி மாவட்டங்களில் கணிசமாகஉள்ளனர்.
இவர்கள் தங்களை கவுண்டர் என்று தான் கூறிக் கொள்கிறார்கள். இவர்களை சந்தித்து வரும் பாமக பிரமுகர்கள் நீங்களும்வன்னியக் கவுண்டர்கள் தான், நம் இருவருக்கும் மொழி தான் வேறு, ஆனால் இருவருமே கவுண்டர்கள் தான். எனவேபாமகவுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களியுங்கள்.
உங்களது சமூகத்தையும் மேலே தூக்கி விடுகிறோம். பல்வேறு பலன்களும் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். பாமகவினரின்இந்த முயற்சிக்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாம்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக, கம்பம், உத்தமபாளையம், சுருளி உள்ளிட்ட இடங்களில் பாமக கொடிபட்டொளி வீசிப் பறந்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதை கருத்தில் வைத்துத் தான் தென் மாவட்டங்களிலும்போட்டியிடுவோம் என ராமதாஸ் கூறத் தொடங்கியுள்ளார்.
Oneindia Mobile