Thursday, November 11, 2010

ஒக்கலிகர் நாட்டாண்மை நூற்றாண்டு விழா

தினமலர்:பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2010,00:49 IST

கம்பம்: கம்பம் காமுகுல ஒக்கலிகர் (காப்பு) சங்கம் மற்றும் ஒக்கலிகர் இளைஞர் பேரவை சார்பில் ரத்ததான முகாம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. கம்பம் காமுகுல ஒக்கலிகர் நாட்டாண்மை ராஜூ கவுடர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த ரத்ததான முகாமிற்கு இளைஞர் பேரவை தலைவர் சதீஸ்குமார் தலைமை வகித்தார். ஒக்கலிகர் சங்க தலைவர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். இளைஞர் பேரவை பொருளாளர் ஆதிராஜ்குமார் வரவேற்றார். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் சுப்புராஜ், டாக்டர்கள் மணிமோகன், சையதுசுல்தான் இப்ராகீம், சூர்யகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. கோலப்போட்டிகளில் முதல் பரிசை மேகலா, இரண்டாம் பரிசை லதா ஆகியோர் பெற்றனர். முன்னாள் எம்.பி. கோபால், முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புராயர், ஒக்கலிகர் சங்க செயலாளர் தாத்துராஜ், இளைஞர் பேரவை துணை தலைவர் எஸ்.தாத்துராஜ் உட்பட கலந்து கொண்டனர். பேரவை செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.