Wednesday, February 24, 2010

எதற்காக - சமுதாய சங்கம்?

                 
                    சிந்திப்போம்!  செயல்படுவோம்!!
                               ட்டுரை:திரு வெள்ளிங்கிரி [DSP ஓய்வு] தலைவர்,
                          கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கம் 
                      இறைவன் படைப்பில் உருவான உயிரின்
பரிணாம வளர்ச்சி, ஓருயிர் இன தாவரங்கள் முதல், படிப்படியாக வளர்ச்சியுற்று கண்,காது,மூக்கு, வாய், தோல் என முறையே ஒளி,ஒலி,வாசனை,ருசி,தொடு உணர்வுகள் கொண்ட அயிந்தறிவு பிராணிகளாகின.அதிலிருந்து “நல்லது-கெட்டது” என பிரித்து அறியக்கூடிய “பகுத்தறிவு” எனும் ஆறாவது அறிவு கொண்ட மனித இனம் உருவானது.இது விஞ்ஞானமும்-மெய்ஞானமும் ஒப்புக்கொண்ட சரித்திர உண்மை.
                      சுமார் ஒருகோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தோன்றியது என எடுத்துக்கொள்வோம்.
இன்றைய மனிதனின் அறிவு, வளர்ச்சி அவன் தோன்றிய காலத்தில் இல்லை.இருந்திருக்கவும் முடியாது. காடுகளில் மரவுரி தரித்து, பிராணிகளின் சதைகளையே உணவாக உண்டு,குகைகளையும் பாறை இடுக்குகளையும் உறைவிடமாகக் கொண்டு,அ,இ,உ ஊ,என ஒலிகளை மட்டுமே எழுப்பி,சைகை பாசையில் பேசி வாழ்ந்துவந்தான்,சிறிது சிறிதாக ஒருவருடன் ஒருவர் அவரவர் அறிந்த பயிர் தொழில் முதல் பல தொழில்கள்
செய்து வாழ்ந்தான். பிறக்கிறான் சிறிது காலம் வாழ்கிறான். பின் மறைகிறான்.வாழ்ந்தகாலத்தில் இனவிருத்தி செய்கிறான்.இவ்வாறு மனிதகுல சரித்திரம் ஓர் தொடர்கதை.
                   இந்த உருண்டை உலகத்தில் உள்ள பல்வேறு நிலப்பகுதியில் மாறுபட்ட சீதோசண நிலைகள்,பல்வேறு பருவ நிலைகள் உண்டு.இதுபோன்ற மாறுபடும் கால சூழ்நிலைகளுக்கேட்ப ஆங்காங்கே அதற்குத் தகுந்தாற்போல் மனித இனம் வளர்ந்தது.எழுத்து-மொழி தோன்றி இன்றுவரை.அடடா எத்தனை முன்னெற்றம்.இவைகள் அத்தனையும் யாராவது
வரையறை செய்து முறை வகுத்து வந்ததல்ல.உலகத்தின் ஒரு பகுதி மக்கள் மற்ற பகுதி மக்களுடன் தொடர்பு கொள்ள வழிவகை இல்லாத கால சூழ்நிலையில் பல நாடுகள்,வெவ்வெறு மதங்கள்,ஜாதிகள் அத்தனையும் அந்தந்த கால சூழ்நிலைகளுக்கேற்ப மனிதனால் எற்படுத்தப்பட்டது.ஆனால் இன்று அறிவியலும்,சிந்தனை சக்தியிலும் அபரிமிதமான முன்னேற்றம் கண்டுள்ள மனிதன் “ஒன்றே குலம்-ஒருவனே தேவன்” என உணரத்தொடங்கிவிட்டான், இருப்பினும் தன்னோடு வாழையடி வாழையாக இனைந்து வந்த மதம்-தொழுதுவந்த கடவுள்(உருவம்) அவன் மனதிலிருந்து அவ்வளவு எளிதாக நீக்கிவிடமுடியுமா? நீக்கிவிடத்தான் சில நீச்சர்கள் விட்டுவிடுவார்களா?
                   இதே போல் தான் ஜாதிகள் ஏதோ சில காரணங்களுக்காக,செளகரிங்களுக்காக பழிகிக் கொண்ட தொழில்,பேசி கொண்ட மொழி போன்றவைகளல் கூடிக்கூடி வாழ்ந்துவிட்ட மக்கள் அவரவர்களுக்கு என்று ஜாதிகள்,குலங்கள் என பெயரிட்டு வாழ்ந்துவிட்டார்கள்.வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.படிப்படியாக ஏறபடுத்திக் கொண்ட மதங்களை,ஜாதிகளை இன்று திடீரென விட்டுவிட சாதாரண மனிதனால் இயலுமா? பழக்கவழக்க,பாச பந்தங்கள் தொடர்வது இயற்கையல்லவா? நிச்சயமாக ஜாதி மதங்கள் என்ற பேதங்கள் தேவை இல்லை.அவைகள் மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை.அறிவு வளர,வளர மனிதனாலேயே அவைகள் அழிக்கப்பட்டுவிடும்.எப்போது? இதுதான் கேள்வி.எவ்வாறு பல்வேறு மதங்கள்,பல்வேறு ஜாதிகள், பல்வேறு கடவுள்கள் என்று தோற்றுவிக்கப்பட்டு இலட்சக்கணக்கான ஆண்டுகள்
பழக்கப்பட்டுவிட்டதோ,அதே போல அவைகள் மறையவும் குறைந்தது பல நூறு ஆண்டுகளாவது ஆகும்.இன்று தலைதூக்கியுள்ள மதப்பிரச்சனைகள் எல்லாம் சிலரால் ஊக்குவிடப்பட்டுள்ள பிரச்சனை.தன் மதம்பெரிது.உன் மதம் தாழ்ந்தது.நீழ் கீழ் ஜாதி-நான் மேல் ஜாதி! நான் வழிபடும் கடவுள்தான் உண்மையான கடவுள்,மற்றவர்கள் தொழுவது கடவுளே அல்ல என கூறித்திரியும் வெறியர்களையும் சாமாளித்தல்லவா வெற்றி பெற்றாக வேண்டும்.
                    காற்று(சுவாசம்),நீர்,நெருப்பு,(உஷ்ணம்),நிலம்,(உணவு),ஆகாயம்,இவைகள் யார் கொடுத்தது.இவைகளில் ஒரு துளியை எந்த ஒரு மனிதனாலும் விஞ்ஞானியாலும் செய்யமுடியுமா? முஸ்லீம் சுவாசிக்கும் காற்று வேறு-கிருஸ்த்து சுவாசிக்கும் காற்று வேறு?மற்றவர்கள் சுவாசிக்கும் காற்றுவேறுவேறா? குடிக்கும் நீர் வேறு வேறா? அறியவில்லையே மதவெறி கொண்டவர்கள்.காலம் மாறும்.ஜாதி பேதங்கள் இல்லாத நாடு உருவாகும்!பெரும்பாலோர் இன்று அந்த திசை நோக்கித்தான் பணியாற்றுகிறார்கள். “உலக சமுதாய சேவை” என பணி தொடர்கிறது.இந்த பிரபஞ்சம் முழுவதும் அணுமுதல் அண்டம் வரை ஜட்ப்பொருள்-உயிர் இனம் அத்தனையிலும்  வான்காந்தமாய்-ஜீவநாதமாய்-அறிவாய்-உயிராய் –அன்பாய்-கருனையாய்-சுத்ட வெளியாய் எங்கும் எதிலும் உள்ளதே அந்த இறை சக்தி.இதில் ஏது ஏற்றத் தாழ்வு?
                    மனித இன பெருக்கத்திற்கு -தொடர்ச்சிக்கு
(இனவிருத்திக்கு) தாரம் வேண்டும்.அந்த தாரத்தை தன் அருகிலேயே ஒரே பாரம்பரியத்தில்,தான். தினம்தினம் சகோதிரியாய் பார்த்துப் பழகிய,ஏறக்குறைய இருவரின்
உயிரினங்களும் ஒரே மரபணுவாக உள்ளவளை தாரமாக கொள்வது சிறப்பான இனவிருத்தியைக் கொடுக்காது.இது விஞ்ஞானபூர்வமான உண்மை.அதனால் தான் பாரம்பரியம் தூரம் ஆக ஆக ,அவர்கள் ஓர்குலம்.இவர்கள் ஓர்குலம்-அவர்கள் அக்காள் தங்கை-இவர்கள் மாமன் மச்சினன்,என பழகிப்பழகி,தாரத்தின் மீது ஒருவகை பாசம்-தங்கை மீது ஒருவகை பாசம் என மனம் பக்குவம் அடைந்து,மாறுபட்டவர்கள் கூடி இனவிருத்தி ஏற்படுவதுதான் சிறப்பு என விஞ்ஞானமே ஒப்புக்கொள்கிறது.இதற்காகத்தான் ஜாதிகளிலும் குலங்கள் என்ற பிரிவுகளோ? எப்படியோ நம் முன்னோர்கள் நல்லெண்ணத்துடன்,ஊக்கமுக்,ஆக்கமும் கொண்டு இனவிருத்திக்காகத்தான் இப்பிரிவுகளை ஏற்படுத்தியிருப்பாரகளேயல்லாது நிச்சயம் சச்சரவுகளுக்காக அல்ல.
                    ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் பெயர் உண்டு.அவன் வசிக்கும் தெரு-கூடி வாழும் ஊர்,-வட்டம்-மாவட்டம்-மாநிலம்-தேசம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர்.ஒவ்வொன்றையும் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள பெயர்கள் தேவை.இனத்தால்,மொழியால்,தொழிலால்,பண்பாடுகளால்,பழக்க வழக்கங்களால்,இறைவழிபாட்டால்- இடத்திற்கிடம் மாறுபட்ட காரணத்தால் பல மதம்,பல ஜாதி,பல் பெயர்கள்,இருந்துவிட்டு போகட்டுமே.எல்லோருக்கும் போய் சேருமிடம் ஒன்றுதானே.அதுவரை அனைவருடனும் அன்புடனும் கருணையுடன் வாழ்ந்துவிட்டு போவோமே.இந்த வாழ்க்கைக்கும் ஓர் சீரான பாதை வேண்டும்.ஒன்றுக்கடுத்தது மற்றொன்று  என படிப்படியாக வரவேண்டும்.ஒவ்வொருவனும்
இச்சமுதாத்திற்கு ஏதோ ஒரு வகையில் சேவை செய்தாக வேண்டும் அது நம் கடமை.
                    முதலில் “தன் நலம் காத்தல்” பின் தன் “தன் குடும்பநலம் பேணுதல்” பின் தன் சமுதாய (உற்றார்,உறவினர்) நலத்தில் அக்கரை,அதன் பின் பிறந்த நாட்டின் மீது பற்று.பிறகு உலக நல சேவை என படிப்படியாகத்தான் சேவை தொடரவேண்டும் நிச்சயமாக ஒவ்வொருவரும் இந்த அயிந்து படிகளிலும் சேவை செய்தாக வேண்டும்.எதில் எத்தனை சதவிகிதம் என்பது அவரவருடைய வாய்ப்புக்கும் வசதிக்கும் தகுந்தாகும்.தானும் தன் குடும்பம் மட்டுமே போதும்-அவர்கள் நலம் மட்டுமே குறிக்கோள் என வாழ்பவன் மனிதனே அல்ல,மிருகத்திற்கு சமம் தான்.
                    பிறந்து வளர்ந்த சமுதாயத்திற்கு செய்யும்பணி தன் குடும்பத்துப்பணியின் விரிவாக்கமே ஆகும்.தன் குடும்பம்,தன் உற்றார் உறவினர் என விரித்து சமுதாயமாக மலர்ந்துள்ளதே தவிர வேறொன்றும் அல்ல.தன் குழந்தைகளை நன்கு படிக்கவைத்து நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் வேறுயார் அக்கரை கொள்வார்கள்.அதே போல் விரிவக்கப்பட்ட,நீ பிறந்த உன் சமுதாய மக்கள் நலத்தில்,நீதானே அக்கரை கொண்டாக வேண்டும்.நீ பிறந்து வாழ்ந்து வரும் சமுதாயம் தாழ்ந்து மதிப்பும் மரியாதையும் இழந்து போனால் அதில் உள்ள தனி மனிதனான உனக்கு மதிப்பும் மரியாதையும் எப்படி கிடைக்கும்?உன் குடும்பத்தையும்-சமுதாயத்தையும் மறந்துவிட்டு உதரித் தள்ளிவிட்டு நீ பிறந்த சமுதாயத்திற்கு சேவை செய் என் யாரும் கூறவில்லை.நல்ல குணவானாக இரு.உன் குடும்பத்தை கவனி.அடுத்து முதல் பணியாக நீ பிறந்து வளர்ந்த உன் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக
கொஞ்சமாவது செயல்படு.உன்னுடைய சமுதாயத்தின் ஒற்றுமையும் பலமும்தான் உன்னை உயர்ந்தவனாக்கும் அதற்குப்பிறகு தான் உனக்கு அரசியல் கட்சி இன்னும் பலபல.
                    ஆகையினால்,நாம் ஒவ்வொருவரும் முதற்பணியாக நம் குழந்தைகளை, நமது சமுதாய குழந்தைகளை நல்லொரு பிரஜைகளாக ,அறிவாளிகளாக,உயர்கல்வி பெற்றவர்களா, உயர்ந்த பண்பாளர்களாக,ஜாதிமத பேதமற்ற அனைத்து மக்களோடும் சகோதர பாசத்தோடு பழகும் பக்குவமுடையவர்களாக மாற்றிட பாடுபடுவோம் என சபதம் எடுத்துக்கொள்வோமாக. அதே நேரத்தில் அக்கிரமமாக, அநியாயமாக நம்மை யாரும் சீண்டிப்பார்க்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கும் அளவிற்கு நமது ஒற்றுமையையும் பலத்தையும் உயர்த்திக்கொள்ள பாடுபடுவோம்.ஆண்டாண்டு காலமாக பெயர் சொல்லி பழகிவிட்ட ஜாதி பெயரை வைத்து சங்கம் ஏற்படுத்தியதாலேயே நாம் யாரும் ஜாதி  பித்து கொண்டவர்கள். வெறி கொண்டவர்கள் அல்ல. அதே நேரத்தில் நியாமான காரணங்களுக்காகவும், நமது சமுதாய மக்களுக்கு எங்கேனும் அநீதி எற்படுமானால் போரடும் புலிகளாக மாறிவிடுவோம் என மற்றவர்கள் அறியட்டும்.
                   அன்பர்களே! நம் குழந்தைகள், நம் உற்றார் உறவினர் என்ற கூட்டுக்குடும்ப( சமுதாயம்) நம் மக்களின் முன்னேற்றத்தில் அக்கரை காட்டுங்கள். குறிப்பாக இளைஞர்கள் துள்ளி எழுந்து வாருங்கள். முடிந்தவரை எவ்வகையிலேனும் நம் சமுதாய சங்க பணிகளுக்கு உதவுங்கள்.பெரியவர்கள் நம் சங்க பணிபுரிபவர்களை ஊக்குவியுங்கள்.நமது சமுதாயம் முன்னேற்றம்
அடைந்தால் தான் நமக்கு பெருமை.நாம் பிறந்த சமுதாயம் கேட்பாரற்று சீரழிந்து போனால் தனி மனிதனாக நீங்கள் என்னதான் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும்,மற்றவர்களால் மதிக்கப்படமாட்டீர்கள். தூற்றப்படுவீர்கள்.
                    ஆகவே நீங்கள் பிறந்த உங்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் உங்கள் பங்கு என்ன? இதுவரை இல்லாதிருத்தால் அதை இன்றே துவக்குங்கள். அதற்குத்தான் இன்று கோவையில் “ஒக்கலிகர் பவன்” என்றோர் கலங்கரை விளக்கு ஏற்றப்பட்டு உள்ளது.பொருள் தாரீர்,உடலுழைப்பு தாரீர்,ஆலோசனை தாரீர்,ஊக்கம் தாரீர்.
                எந்த ஒரு பொது சேவையிலும் சிறு சிறு  சங்கடங்கள்,பிரச்சனைகள் எழத்தான் செய்யும், அவைகளையே பெரிதாக்கி நம் பொது நோக்கத்தையே சீர் குலைக்க செய்யாமல் பொறுமைகாத்து,சினம் தவிர்த்து,எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சமுதாய முன்னேற்றமே நம் அனைவரது குறிக்கோள் என சபதம் எடுத்து “ஊர் கூடி தேர் இழுப்போம்” வாரீர்! வாரீர்! என அன்புடனும் உரிமையுடனும் அழைக்கிறோம்.
                   நமக்கெல்லாம் யானை பலமாக, நம் சமுதாயத்திற்கு இறைவன் தந்த வரப்பிரசாதமாக கொங்கு கொடைவள்ளல் திரு.ஓ.ஆறுமுகசாமி அண்ணார் அவர்கள் நமக்கு எப்பொதும் துணையிருக்கிறார்.இப்பேர்பட்ட ஓரு மகான் வாழும் காலத்தில் நம் ஒக்கலிக சமுதாயம் கல்வி,தொழிழ்,விவசாயம் போண்றவைகளில் முன்னேறி மதிப்பும், மரியாதையும் பெறவில்லையெனில், பின் எப்போது? இளைஞர்களே! வாலிபர்களே,பெரியோர்களே,என அன்பு சொந்த
பந்தங்களே,வீறுக்கொண்டு விழித்தெழுங்கள்,கிளை சங்கங்களை பலப்படுத்துங்கள்.ஓங்கட்டும் ஒக்கலிக மக்களின் ஒற்றுமை.திக்கெட்டும் ஒலிக்கட்டும் நம் மக்களின் குரல்.

              வாழ்க வளமுடன்   
              
             இங்ஙனம்,அன்புடன்
          R.வெள்ளிங்கிரி (DSP ஓய்வு) 
தலைவர்,கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கம்