Friday, March 5, 2010

தமிழ்நாடு அனைத்து கவுண்டர் நலச் சங்கத்தின்

thats tamil.வியாழக்கிழமை, பிப்ரவரி 23, 2006, 5:30[IST]
Save to Oneindiaமதுரை:

மதுரை வந்த முன்னாள் பிரதமர் தேவே கெளடாவை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது கவுண்டர் சங்கத்தினருக்கும் (கன்னட மொழி பேசும் கவுண்டர் இனத்தினரின் சங்கம்), தேவே கெளடா கட்சியினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

தமிழ்நாடு அனைத்து கவுண்டர் நலச் சங்கத்தின் 2வது மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது. இதைத் தொடங்கி வைப்பதற்கு தேவே கெளடா அழைக்கப்பட்டிருந்தார். இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் கெளடா மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் கெளடாவை வரவேற்பதற்கு கவுண்டர் சங்கத்தினரும், கெளடாவின் கட்சியைச் சேர்ந்தவர்களும் குழுமியிருந்தனர்.

அப்போது விமான நிலையத்திற்குள் நுழைய இரு தரப்பினரும் முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதி பாஸ் இல்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது என்று பாதுகாவலர்கள் மறுத்து விட்டனர். இந் நிலையில் கெளடா கட்சியின் மதுரை தலைவர் ஜான் மோசஸ் உள்ளே நுழைய பாதுகாவலர்கள் அனுமதித்தனர்.

இதற்கு கவுண்டர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கருணாகரன் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனால் அங்கு பெரும் தள்ளுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் தனித்தனியாக நிற்க வைத்தனர். அப்போதும் அவர்கள் அடங்கவில்லை. ஒருவரையொருவர் விமர்சித்தபடி இருந்தனர்.

இவர்களின் குழப்பத்தால் விமான நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் பயணிகள் தவித்தனர். ஒருவழியாக இரு தரப்பினரும் அடங்கினர்.

பின்னர் கெளடா வந்ததும் இரு தரப்பினரும் தள்ளுமுல்லு செய்தபடி தனித்தனியாக வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.